டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு. வெளியான புதிய அறிவிப்பு.!!!!!




குரூப் 2,குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விவரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதை திருத்தம் செய்து கொள்ள TNPSC வாய்ப்பு வழங்கியுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல தடுப்பு விதிமுறை கள் மூலம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக குரூப் 2 ,குரூப் 2 A அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 18ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப் 2 குரூப் 2-ஏ தேர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


இந்த ஆண்டு மொத்தம் 5831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 குரூப் 2A தேர்வின் மூலமும், 5255 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு மூலமும் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்கள் தங்களது ஆதார் குறித்த விவரங்களை இணையதளத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இந்நிலையில் குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு தேர்வர்கள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குரூப் 2 , குரூப்-2ஏ தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் மார்ச் 23-ஆம் தேதிக்குள் ஆதார் ஒருமுறை நிரந்தரப் பதிவு உடன் இணைக்க வேண்டும்.இதனை தொடர்ந்து குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக பதிவு செய்து விட்டதாகவும், அந்த தவறுகளை திருத்த TNPSC அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


இதையடுத்து தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதிவரை ஒரு முறை நிரந்தரப் பதிவு ( OTR) மூலம் விண்ணப்பதாரர்களே விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது குறித்து கூடுதல் விவரங்களை WWW.TNPSCEXAMS.IN என்ற தளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு கொள்ளலாம் என்று TNPSC தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog