ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு.




தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


தற்போது பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடத்தப்பட்டது.


மேலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுக்கால திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடத்தில் 9494 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் இதற்கான தேர்வு நடத்தப்படும் எனவும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திலுள்ள விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் எனவும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog