நள்ளிரவு வரை நீடித்த கலந்தாய்வு; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி


தேனி : ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நள்ளிரவு 2:00க்கு மேலும் தொடர்ந்ததால் ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இணையதள பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் 5 முறை ஒத்திவைக்கப்பட்டது.


பள்ளி கல்வித்துறையின் 'எமிஸ்' இணையதளத்தில் மார்ச் 4 முதல் நேற்று வரை கலந்தாய்வு நடந்தது. இதில் காலை 9:00 மணிக்கு துவங்கிய கலந்தாய்வு இரவு 2:00 மணி வரை நீடித்தது. மாறுதல் பெற்ற மறுநாளே பணியில் சேர வேண்டும். ஆனால் உடனே மாறுதல் ஆணை வழங்காததால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில், 'எமிஸ்' இணைய தளத்தில் ஒருவருக்கு கலந்தாய்வு முடிந்த பின் அடுத்த 'லிங்க்' வருகிறது.


மாவட்டத்திற்குள் இடம் இல்லாவிடில் மாநிலம் முழுவதும் உள்ள இடங்களை தேர்வு செய்கின்றனர். இதனால் ஒருவருக்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. மார்ச் 14ல் பணிநிரவல், 15ல் மாவட்டத்திற்குள், 16ல் மாவட்டம் விட்டு மாவட்டம் என கலந்தாய்வு நடக்கிறது. இதில் காலையில் விரைவாக துவங்கி முடிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் 'எமிஸ்' இணையதளத்தில் மாற்றம் கொண்டு வந்து தாமதத்தை தவிர்க்கவேண்டும், என்றார்.

Comments

Popular posts from this blog