ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ..




 ஜவஹர்லால் 
நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மர்) நிறுவனத்தில் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


நர்சிங் அதிகாரி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர் (சிவில்), இளநிலை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), தொழில்நுட்ப உதவியாளர் - என்டிடிசி, டெண்டல் மெக்கானிக், மயக்கவியல் தொழில்நுட்பவியலார், ஸ்டெனோகிராபர் கிரேட் 2 மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நியமனம் நடைபெற இருக்கிறது.


நர்சிங் அதிகாரி பணியிடத்துக்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2022 மார்ச் 30-ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணைய முகவரி www.jipmer.edu.in ஆகும். குரூப் பி மற்றும் குரூப் சி வகை பணிகளில் 143 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் நபர்களை தகுதி அடிப்படையில் வரையறை செய்து, அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய தேதிகள் :


ஜிப்மரில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கான தேதி - 10 மார்ச் 2022.


நர்சிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், டெண்டல் மெக்கானிக் ஆகிய பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு - 2022 ஏப்ரல் 17ஆம் தேதி - காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.


மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு - ஏப்ரல் 17ஆம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை.


இளநிலை அலுவலக உதவியாளர், மருத்துவ ஆய்வக உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு - ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில்.


ஊதிய விவரம்:


நர்சிங் அதிகாரி - ரூ.44,900

மருத்துவ ஆய்வக உதவியாளர் - ரூ.35,400

இளநிலை பொறியாளர் - ரூ. 35,400

என்டிடிசி தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.35,400

டெண்டல் மெக்கானிக் - ரூ.25,500

இளநிலை அலுவலக உதவியாளர் - ரூ.19,900

மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் - ரூ.25,500

ஸ்டெனோகிராஃபர் கிரேட் 2 - ரூ.25,500


கல்வித் தகுதி:


நர்சிங் அதிகாரி - பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு.


மருத்துவ ஆய்வக உதவியாளர் - மருத்துவ ஆய்வக அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு அனுபவம்.


இளநிலை பொறியாளர் - சிவில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்பு 3 ஆண்டு அனுபவம். கட்டட டிசைன் மற்றும் கட்டுமான திட்டங்களில் பணி செய்திருக்க வேண்டும். இதேபோன்று எலெக்ட்ரிக்கல் பிரிவில் படப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் எலெக்ட்ரிக்கல் கட்டமைப்பு பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


என்டிடிசி தொழில்நுட்ப உதவியாளர் - இசிஇ பிரிவில் பொறியியல் படிப்பு.


டெண்டல் மெக்கானிக் - அறிவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி.


இளநிலை அலுவலக உதவியாளர் - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.


மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் - மயக்கவியல் பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.


ஸ்டெனோகிராஃபர் கிரேட் 2 - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் திறன் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.


Comments

Popular posts from this blog