விழுப்புரத்தில் இன்று (26-03-2022) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. விவரம் உள்ளே...!!
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து இன்று திண்டிவனத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 9:00 முதல் மாலை 3:00 வரை முகாம் நடக்கிறது. இதில், 120-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000 காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இந்த முகாமில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,-டிப்ளமோ, டிகிரி, பி.டெக்.,- நர்சிங், எம்.பி.ஏ., போன்ற கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்காக,www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன் கூறியுள்ளார்.

Comments
Post a Comment