புதுச்சேரியில் கான்ஸ்டபிள் பணிக்கு எழுத்து தேர்வு விடை குறிப்புகள் இணையத்தில் வெளியீடு




புதுச்சேரியில் ஐந்து மையங்களில் நடந்த கான்ஸ்டபிள் தேர்வில் 2627 பேர் பங்கேற்றனர்.புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 390 கான்ஸ் டபிள் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜன., 19ம் தேதி முதல் உடல் தகுதித் தேர்வு நடந்தது.



இதில் ஆண்கள் 2,207 பேர், பெண் கள் 687 பேர் என மொத்தம் 2,894 பேர் தேர்வாகினர்.டெக் ஹேண்ட்லர் பணிக்கு தேர்வானவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவு நீங்கலாக, 2644 பேருக்கு எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.லாஸ்பேட்டை விவேகா னந்தா மேல்நிலைப்பள்ளி, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாத்திமா மேல்நிலைப் பள்ளி, இதயா கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 5 மையங்களில் தேர்வு நடந்தது.புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்த்திருத்த துறை தேர்வை நடத்தியது.காலையில் முதல் தாள் தேர்வு, மாலையில் 2ம் தாள் தேர்வு நடந்தது.தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 2644 பேரில், ஆண்கள் 1952, பெண்கள் 675 என மொத்தம் 2627 பேர் தேர்வில் பங்கேற்றனர்.


தேர்வின் விடைகள் https://recruitment.py.gov.in/police என்ற இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.விடைகள் மீது ஆட்சேபனைகள் இருந்தால் இன்று 20ம் தேதி மாலை 6:00 மணிக்குள், dpar-exam.pon@nic.in என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.


லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் கான்ஸ்டபிள் தேர்வு எழுத வந்த பெண் ஒருவர், தனது கைக்குழந்தையை, ஆஷா பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு எழுதச் சென்றார். தேர்வு முடியும் வரை ஆஷா பணியாளர்கள் அக்குழந்தையை கவனித்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog