நிரப்பப்படாத அங்கன்வாடி காலிபணியிடங்கள்


சிவகங்கை, : அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் 7 ஆயிரம் பணியிடங்கள் கூடுதல் பணிச்சுமையுடன் உள்ளனர்.


பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிப்பதாக ஐ.சி.டி.எஸ்.,ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ஐ.சி.டி.எஸ்., ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ராணி, பொதுச்செயலாளர் வாசுகி தெரிவித்ததாவது: ஐ.சி.டி.எஸ்., திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் 38 ஆண்டுகால வாழ்வாதார கோரிக்கையான அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். 2021 ல் ஜன., முதல் மார்ச் வரை 3 கட்ட போராட்டங்கள் நடத்தினோம். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த ஓய்வூதிய தொகை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என உறுதியளித்திருந்தார்.


 தற்போதைய பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமையில் பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.


 காலிப்பணியிடங்களை நிரப்பி பட்ஜெட் கூட்டத்தொடரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட அறிவிப்பு வெளியிட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog