முதுகலை பட்டதாரிகளா நீங்கள்? ஏப்ரல் 4க்குள் மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கவும்!




தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


துணை ஆசிரியர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி :


M Tech./M.Sc./Ph.D. with specialization in Post-Harvest Technology/ Food Technology/ Food Engineering/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/Chemistry/ Analytical Chemistry/Biochemistry or Agricultural Engineering / Chemical Engineering specialized in Food Process Engineering.


இதோடு 10 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் ரூ. 80,000


உடற்கல்வி ஆசிரியர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி : Master Degree in Physical Education முடித்திருக்க வேண்டும். இதோடு 5 ஆண்டு பணி முன் அனுபவம் வேண்டும்.


சம்பளம் : ரூ. 36,000 - 42,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி : M.Tech / M.Sc. / Ph.D. degree in Food Process Engineering/ Food Engineering/ Chemical Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management/ Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance/ Biotechnology/ Nanotechnology/ Chemistry/ Analytical Chemistry / Biochemistry


சம்பளம் : ரூ. 31,000 + HRA


இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி : M. Tech degree in Food Process Engineering/ Food Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management / Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance


சம்பளம் : ரூ. 31,000 + HRA என நிர்ணயம்.


திட்ட உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித் தகுதி : M.Tech/ M.Sc. degree in Microbiology/ Biotechnology/ Food Technology/ Food Safety & Quality Assurance முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 20,000 என நிர்ணயம்.


வயது வரம்பு:


மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


பெண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


துணை ஆசிரியர் பணிகளுக்கு 70 வயது வரையிலும், உடற்கல்வி ஆசிரியர் பணிகளுக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், http://niftem-t.ac.in/careersrf.php மற்றும் http://niftem-t.ac.in/careermsrf.php என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


விண்ணப்பக்கட்டணம் : ரூபாய் 500. எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 4, 2022


தேர்வு செய்யும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், இதனைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும். இதனையடுத்து விண்ணப்படிவத்தை ஸ்கேன் செய்து projectrecruitment@iifpt.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog