தமிழக காவல் துறையில் 444 உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு மார்ச் 8 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. மற்ற துறைகளை தொடங்கி தற்போது தமிழக காவல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNUSRB தேர்வு வாரியம் காவலர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு TNUSRB (pc) பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டு வந்தது.


அதனை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் எஸ்ஐ தேர்வுக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த தேர்வில் அரசின் புதிய வழிகாட்டுதலின்படி தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த தகுதிகள் செய்முறை தேர்வு எழுத தேர்வு பாடத்திட்டம் மாதிரி கேள்விகள் போன்ற அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வுக்கு விண்ணப்பிப்போர் உங்களுக்கு உதவும் வகையில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 044-40016200,044-28413658 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500 செலுத்த வேண்டும். மேலும் திறந்த ஒதுக்கீடு மற்றும் துறைசார் கோட்டா பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம் ரூபாய்1,000 ஆகும்



Comments

Popular posts from this blog