குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம் - டி.என்.பி.எஸ்.சி வேண்டுகோள்




குருப் -4 தேர்வுக்கான (GROUP 4) அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. இந்தநிலையில், குரூப் -4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு இணையத்தில் பரவிவந்தது.


இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.


தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி -4-க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog