தனியார் துறைகளில் 50,000 காலி பணியிடங்கள். மார்ச் 20ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!



வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு முகாம் குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.


இந்த செய்தி குறிப்பில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் போன்ற துறைகள் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி அன்று வண்டலூர் பிஎஸ் அப்தூர் ரஹ்மன் கிரசீன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடத்த இருக்கிறது. இம்முகாமில் 400க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் ஆல் 5,000கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


இந்த முகாம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமிற்கு வருபவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சி பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதனையடுத்து அயல் நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அந்நாட்டின் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக பதிவு செய்யப்படவுள்ளன.


இம்முகாமில் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வருமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog