காவலர் தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு..! கட்டாயம் இந்த மதிப்பெண் எடுக்க வேண்டும்..!



காவல்துறைக்கான மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி காவலர் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஆரம்பத்தில் விருப்பம் மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதில் முதல் தாள் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த முதல் தாளில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். காவலர் தேர்வு 2ஆம் தாள் வழக்கம்போல் 50 பொது அறிவு வினாக்களும் 30 உளவியல் பிரிவு வினாக்களும் இடம்பெறும். இதில் முதல் தாளில் 40 மதிப்பெண் பெறவில்லை என்றால், இரண்டாம் தாள் திருத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog