சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியானது!!




சென்னை  செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து கொரோனா தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்கப்பட்டதுடன், செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடத்தவும் சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்து. அதன்படி கடந்த ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. அனைத்து கல்லூரிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வுகள் முறையாக நடைபெற்றன.


இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://result.unom.ac.in-ல் மற்றும் https://egovernance.unom.ac.in/results/ ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog