ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித் தொகை: நிதியமைச்சர் தகவல்




பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.


அப்போது, பேசிய அவர், "அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ஏற்கெனவே 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்து.


இந்தத் திட்டம் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் பொருந்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Comments

Popular posts from this blog