பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. அரசு இ-சேவையில் கூடுதலாக 42 சேவைகள்..!




தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்களை நடத்தி வருகிறது.


இதுகுறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது; 'இ-சேவை மையங்களில் ஆதார் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகமானது.


அத்துடன், மேலும் 134 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் 42 புதிய சேவைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது.


விரைவில், 176 சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பெற முடியும். அடுத்த கட்டமாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆறு சேவைகள்; பள்ளிக் கல்வித் துறையின் 23 சேவைகள் என 29 சேவைகளை இ-சேவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது' என்று அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog