தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!!



தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து வழக்கம்போல பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதனால் நடப்பு நிதியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையடுத்து பொது மாறுதல் குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் இடமாறுதல் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு போன்றவை தொடங்கியது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு சில நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


தற்போது அதனை நடத்துவதற்காக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு திருத்திய கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் அரசு நகராட்சி முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை - 1, உடற்பயிற்சி இயக்குனர் நிலை -1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு 16ஆம் தேதி தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog