பாரதியார் பல்கலை தொலைதுார பட்டப்படிப்பின் கீழ், டிச., 21ல் நடந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.


மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை பயன்படுத்தி, முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண் சான்றிதழ்கள், மாணவர்களுக்கு தபால் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யாமலும், உரிய கட்டணங்கள் செலுத்தப்படாமலும் வரும் விண்ணப்பங்கள், தாமதமாக பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விபரங்களை, www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog