தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்.. காலிப்பணியிடங்கள் விரைவில்?.




தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் ரேஷன் அட்டை வாயிலாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ரேஷன் அட்டை முக்கியமான ஆவணமாக பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 4 மாதத்திற்கு முன்னதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆகவே ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.


தமிழகம் முழுவது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழு நேர ரேஷன் கடைகள் மற்றும் 9639 பகுதி நேர நியாய விலை கடைகள் என்று மொத்தம் 33,141 கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக சட்டப் பேரவையில் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப்பணியிடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ஆம் வருடம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை கடைபிடித்து பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று சிறப்பு அறிவிப்பை அந்த சமயம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் தமிழக ரேஷன்கடைகளில் டிசம்பர் 31, 2021 தேதியில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் தற்போது 3,836 விற்பனையாளர்கள் தலா ஒரு ரேஷன் கடையினை கூடுதலாக நிர்வகித்து வருகின்றனர். அதாவது 1128 விற்பனையாளர்கள் 2 ரேஷன் கடைகள், 222 விற்பனையாளர்கள் 3 கடைகள், 15 விற்பனையாளர்கள் தலா 5 ரேஷன் கடைகள் மற்றும் அதற்கு கூடுதலாக கடைகளை நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog