இல்லம் தேடி கல்வி திட்டம் ஏன் - அமைச்சர் அன்பில்மகேஷ் விளக்கம் !!



ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற‌ தனியார் தொண்டு அமைப்பு சார்பாக இந்திய இளம் விஞ்ஞானி பரிசளிப்பு விழா GRO SAVE ஆஃப் வெளியீட்டு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.


இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இளம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கி கவிரவித்தார்.


பின்னர் உரையாற்றிய அவர், பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரை சீரான ‌ஒரே மாதிரியான கல்வி எல்லோருக்கும் சேர வேண்டும் எனவும், கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாததால் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.


இதனை சரி செய்யவே இல்லம் தேடி கல்வி உருவாக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஆர்வத்தை ஏற்படுத்தப்படும் என்றும், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு நாட்டின் வளர்ச்சியாக பார்க்கிறோம் என்றும் கூறினார்

Comments

Popular posts from this blog