M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்., ஆனால் இது செல்லும் - பல்கலைக்கழக மானியக்குழு




வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இருந்து முழுவதும் நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு என யுஜிசி அறிவிப்பு.


வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி (UGC) தெரிவித்துள்ளது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளிலும் M.Phil படிப்பு கைவிடப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும் கூறப்பட்டது.


இதனிடையே, முதுநிலை கல்வி முடிக்காமல் இளநிலை பட்டப்படிப்பு முடிந்ததும், நேரடியாக பிஎச்.டி.படிப்பில் சேரும் வகையில் புதிய இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்ய உள்ளது. முன்பு பிஎச்.டி., படிக்க வேண்டும் என்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆனால், இனி முதுநிலை பட்டம் பெறாமலே பிஎச்.டி., படிக்கும் வகையில் புதிய திட்டத்தை UGC அறிமுகம் செய்ய உள்ளது.


அதன்படி, மூன்று ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால PG படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமென்றாலும், படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம். எனவே, இனி Ph.D படிக்க M.Phill படிக்க வேண்டிய அவசியம் இல்லை, UG படிச்சாலே போதும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog