TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கவனத்திற்கு; புகார் குறித்து தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!




 TET – விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை TRB அறிவித்துள்ளது.



ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும் தாள்-II எழுதுவதற்கான அறிவிப்பு 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 


ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை .9444630028, 9444630068 கைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் trbtetgrievance2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தகுதித் தேர்வு, தாள் - I மற்றும் தாள் - II தமிழ்நாட்டில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம், 2009 (RTE சட்டம்) பிரிவு 23 இன் துணைப்பிரிவு (1) இன் விதிகளின்படி, NCTE ஆகஸ்ட் 23, 2010 தேதியிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை http://trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வாணையம் அறிவித்தது.

Comments

Popular posts from this blog