TNPSC: வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு!


வரும் 19-ம் தேதி நடைபெறும் வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 19-ஆம் (முற்பகல் மற்றும் பிற்பகல்) சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog