TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 


TNPSC யில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை அந்த கணக்குடன் இணைப்பதற்கு கடைசி தேதி ஏப்ரல் 30 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.



தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் தமிழ்நாடு அரசு சென்ற ஜனவரி 20 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்றால், தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை அறிவித்துள்ளது.மேலும் இந்த பிரிவில் சுமார் 5831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.


இந்த தேர்வுகளுக்கு பதவிகளாக, நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்களும் நிரப்பிட உள்ளன.


இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி, டிஎன்பிஎஸ்சியில் நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28 ஆம் தேதிக்குள் இணைந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து இருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மாற்றியமைத்துள்ளது. ஆனால் ஏற்கனவே OTR கணக்குடன் ஆதார் கார்டை இணைத்த நபர்கள் மீண்டும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog