TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் - ஆணையத்திடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!




கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2 -க்கான தேர்வை அறிவித்துள்ளது. மேலும் 5000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதனை அடுத்து அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது, நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு வருகின்ற மே 21-ஆம் தேதி தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய இருப்பதாகவும் மற்றும் இதற்கான விண்ணப்பங்கள் www.tnpsc.gov .in என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து விண்ணப்பங்களை மார்ச் 23-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக ஒரு முறை பதிவு செய்த பின்னே தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது அந்த ஆணையத்தின் நடைமுறை கொள்கையாக இருக்கிறது.


அதன்படி ஒருமுறை பதிவு செய்த பலர் பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை மறந்து வருகின்ற நிலையில் அதை மீட்பதற்காக அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயம் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்வு விண்ணப்பத்தில் 'சாய்ஸ் முறையில்' (உதாரணமாக)பொது தமிழ்/ பொது ஆங்கிலம், தேர்வு மையம் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதில் தவறான முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் முன்னர் இந்த தவறுகளை திருத்துவதற்காக கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது.


ஆனால் தற்போது இந்த முறை அந்த வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே விண்ணப்பித்தவுடன் பார்க்கவும்/ திருத்தவும் என்ற இணைப்பில் சென்று பார்க்க மட்டும் முடியும். ஆதலால் திருத்தும் இணைப்பானது செயல்படவில்லை. மேலும் விண்ணப்பிப்பவர்கள் ஆணையத்தின் டோல் ப்ரீ எண் இணைப்பு கிடைப்பதும் அரிதாக உள்ளதால், மீண்டும் விண்ணப்பிக்கவும் வழியில்லை. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு ஆணையம் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog