அரசு சார்பில் TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! எப்படி விண்ணப்பம் செய்வது..? முழு விவரம்.




TNPSC Group தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


TNPSC Group- I & IIA 2022 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ தகுந்த பயிற்றுநர்களைக்‌ கொண்டு வகுப்புகள்‌ நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ TNPSC Group- I & IIA 2022) 5,413 காலிப்பணியிடங்கள்‌ வெளியிட்டுள்ளதால்‌ போட்டித்தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து, பயன்பெறலாம்‌.


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தண்ணார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. மேலும்‌ தன்னார்வ பமிலும்‌ வட்டத்தில்‌ போட்டித்தேர்விற்கு, 'தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம்‌ மற்றும்‌ புத்தகங்கள்‌ பராமரிக்கப்பட்டு வருகின்றன. 


இப்பயிற்சி வகுப்பில்‌ இலவசமாக பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படும்‌, மாதிரித்தேர்வுகளும்‌ நடத்தப்படும்‌. இப்பயிற்சியில்‌ சேர விருப்பம்‌ உள்ளவர்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தினை அணுகலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு 04342 296188 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திவ்யதர்சினி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Comments

Popular posts from this blog