TRB: வரும் 18-ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு.! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.!




பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, சரியாக பதிவேற்றம் செய்யப்படாத நபர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.


இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2017-18 ஆண்டிற்கு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. விண்ணப்பங்களுடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வுகள் 2021 டிசம்பர் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் ஆன்லைனில் நடந்தது. பின், இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.


ஏற்கெனவே, பணிநாடுனர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்துள்ள கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதலாக இளங்கலை, முதுகலை, எம்பில், பிஎச்டி, பணி அனுபவச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் ( நகல்கள்) செய்ய வேண்டும். அரசு உதவிபெறும், சுயநிதி பல்தொழில்நுட்பக் கல்லூரியில், கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த தொழில்நுட்பக் கல்வி இயக்குநரிடம் மேலொப்பம் பெற்றிருத்தல் வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள், சார்ந்த நிகர் நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் மேலொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்.


அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கற்பித்தல் பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றுள்ளவர்கள் சார்ந்த கல்லூரிக் கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்றிருத்தல் வேண்டும். பணிநாடுநர்கள் சான்றிதழ்களை 18.3.2022-க்குள் http://www.trb.tn.nic.in/ என்ற TRB Website-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பானக் கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 9444630068, 9444630028 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog