10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை மாற்ற ஆசிரியர் கழகம் கோரிக்கை:பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தல்



தேனி:' 'வெப்பக்காற்று அதிகம் வீசுவதால் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மறுபரிசீலனை செய்து மே 8 க்குள் தேர்வுகளை முடித்து ஜூன் 1 பள்ளிகளை திறக்க வேண்டும்,'' என, தேனியில் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மே 6 ல் - தமிழ், 14 ல் விருப்ப மொழி, 18 ல் ஆங்கிலம், 21 ல் தொழிற்கல்வி, 24 ல் கணிதம், 26 ல் அறிவியல், 30 ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.


விருப்ப மொழி தேர்வு நம் மாணவர்களுக்கு இல்லாததால் தமிழ், ஆங்கில தேர்வுகளுக்கு இடையில் ஏழு நாட்கள் உள்ளன. பின் ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 2 நாட்கள் இடைவெளி உள்ளது.சிவக்குமார் கூறியதாவது: கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. முன் எச்சரிக்கையாக முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு தேர்வுகளை ஏப்., 25 க்குள் முடித்து 10 ம் வகுப்புத் தேர்வுகளை ஏப்., 27 துவங்கி மே 8 க்குள் முடிக்கவும், ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கும் வகையிலும் அட்டவணை வெளியிட வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog