10 ,11மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆணையர் நந்தகுமார் ஆலோசனை!!



10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பள்ளி கல்வித்துறையால் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. அத்துடன் 12ஆம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனிடையே 12ம் வகுப்பு 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் இன்று நடக்கவிருந்த நிலையில்கணித தேர்வுக்கான 2 வகையான வினாத்தாள்களும் நேற்று சமூக வலைதளங்களில கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் புதிய வினாத்தாள் இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog