10ம் வகுப்பு செய்முறை தேர்வு வரும் 25ல் துவக்க உத்தரவு




 பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு, வரும் 25ம் தேதி முதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:புதிய பொது பாடத்திட்டத்தின்படி, 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு கட்டாயம்.


இதில் கருத்தியல் தேர்வுக்கு, 75; செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள்.நடப்பு கல்வி ஆண்டு செய்முறை தேர்வை, ஏப்., 25ல் துவங்கி, மே 2க்குள் முடிக்க வேண்டும்.


காலை, 9:00 மணி முதல் 11:00 மணி வரை; பிற்பகல் 2:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, இரு வேளைகளில் நடத்த வேண்டும்.இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு ஒரு மணி நேரமும், உயிரியலில் தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, ஒரு மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும்.


இந்த செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அதேபோல், பத்தாம் வகுப்பு எழுத்து தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியதும் கட்டாயம். இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, பொது தேர்வில் தேர்ச்சி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog