ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறான முறைகளில் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்




மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலேயே போலிச் சான்றிதழை கண்டறியும் ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்


சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்சின் 2022 -ஆம் ஆண்டு இளம் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது.


இம்மாநாட்டில் பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர்செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிகளில் மூர்க்கமாக செயல்படும் மாணவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்க வேண்டும். என்ற கருத்து குறித்த கேள்விக்கு, "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே, ஆகையால் இரண்டாவது அன்னையாக விளங்கக்கூடிய ஆசிரியர்கள் தான் மாணவர்களை திருத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக அறக்கட்டளைகள் மாணவர்கள் நலன் சார்ந்த இடங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


கொரோனா காலத்தில் ஆசிரியர்களை இரண்டாம் அன்னையாக பார்ப்பதாகவும் ஆனால், ஆசிரியரிடம் பள்ளி மாணவர்கள் தவறான முறைகளில் நடந்துகொள்வது, பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல் இரு குழந்தைகளின் தந்தையாகவும் மன வேதனையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம் மன ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்வது தங்களின் கடமை என கூறினார்.

Comments

Popular posts from this blog