குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பதிவு




தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தேர்வுக்கு சுமாா் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனா்.



இது கடந்த காலங்களைவிட மிக அதிகம் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


கடைசி நாளான வியாழக்கிழமை மட்டும் சுமாா் 4 லட்சம் பேர் வரையில் விண்ணப்பம் செய்துள்ளனா்.


தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் குரூப் 4 தோவு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா் உள்பட 7,100 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.


புதன்கிழமை நிலவரப்படி 17 லட்சம் போ விண்ணப்பத்திருந்தனா். கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 20 லட்சத்து 53 ஆயிரத்து 837 போ விண்ணப்பம் செய்திருந்தனா்.


நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்பதால், இதன் எண்ணிக்கை 21 லட்சமாக உயரும் என தோவாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். விண்ணப்பதாரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை தெரியவரும் என தோவாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த முறை... கடந்த 2019-ஆம் ஆண்டு 5,100 குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோவை சுமாா் 16 லட்சம் பேர் எழுதினா். இந்த நிலையில், இப்போது சுமாா் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனா்.

Comments

Popular posts from this blog