மக்கள் நல பணியாளர் மீண்டும் பணியில் சேர தயக்கம


திருப்பூர்:வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படுமென அறிவித்தும், பழைய மக்கள் நலப்பணியாளர் போதிய ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிட்டனர்.தேசிய வேலை உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட் போது, 2008ம் ஆண்டில், மக்கள் நலப்பணியாளர் நியமிக்கப்பட்டனர்.




இவர்கள், ஊராட்சி அளவில் நடக்கும், வேலை உறுதி திட்ட பணிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பொறுப்பு வகித்தார்.அப்போது, பணியாளருக்கு, வருகை பதிவேடு விவரம் அடிப்படையில், சம்பளம் வழங்கப்பட்டது. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கைகோர்த்து, மக்கள் நலப்பணியாளர் மூலம், லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்தனர்.அ.தி.மு.க., அரசு, 2011ல் பதவியேற்றதும், மக்கள் நலப்பணியாளரை பணியில் இருந்து நீக்கியது. பணியாளர் ஒருவரை, பணித்தள பொறுப்பாளராக நியமித்தது. தொழிலாளரின் சம்பள விவரத்தை, 'ஆன்லைன்' மூலம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் வழங்கவும்உத்தரவிட்டது.தி.மு.க., அரசு பொறுபேற்றதும், மக்கள் நலப்பணியாளர் குறித்த விவரத்தை சேகரித்தது. இந்நிலையில், மீண்டும் மக்கள் நலப்பணியாளர் என்ற பெயரில் நியமிப்பதற்கு பதிலாக, வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தை தோற்றுவித்துள்ளது.தமிழகததில் உள்ள, பணி நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளருக்கு, முன்னுரிமை அளித்து, பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.




இருப்பினும், நிரந்தர பணியிடம் தோற்றுவிக்காததாலும், போதிய சம்பளம் நிர்ணயம் செய்யாத காரணத்தினாலும், மக்கள் நலப்பணியாளர் பெரும்பாலானோர், மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பவில்லை.மாதம், 5,000 ரூபாய் சம்பளம், ஊராட்சியின் இதர பணிகளை செய்ய, 2,500 ரூபாய் என, 7,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமென அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இருப்பினும், 10 ஆயிரம் ரூபாய் வரை எதிர்பார்த்திருந்த, பழைய மக்கள் நலப்பணியாளர்கள் பலருக்கும், இதனால் அதிருப்தியே.




இதுகுறித்து மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர்கள் கூறுகையில், 'வேறு பணிகளை தேர்வு செய்து, மாதம்,15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தற்போது, சம்பாதிக்கிறோம். இனிமேல், மீண்டும் மக்கள் நலப்பணியாளராக பணியாற்ற, 15 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும்.ஊராட்சி பணியையும் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்; நிரந்தரமான பணி என்றும் கூறவில்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பணிக்குதிரும்ப விருப்பமில்லை,' என்றனர்.

Comments

Popular posts from this blog