பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் இதெல்லாம் பழசு.. அதிமுக திட்டங்களின் தொடர்ச்சியை அறிவித்த திமுக



நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களின் தொடர்ச்சியான அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் வகுப்பறை


கடந்த அதிமுக ஆட்சியில் 60 கோடி ரூபாய் செலவில் 3ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலை அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் 7500 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்


உயர் தொழில்நுட்ப ஆய்வகம்

அதேபோன்று கடந்த அதிமுக ஆட்சியில் 6 ஆயிரத்து 29 உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. நேற்றைய தினம் வெளியான பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் 2713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கான கலைத் திருவிழா

கடந்த 2020 -2021 கல்வியாண்டில் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மானிய கோரிக்கையின் போது மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாவட்டம் தோறும் தமிழகம் முழுவதும் போட்டிகள், உணவுத்திருவிழா போன்றவை நடத்தப்படும் என அறிவித்திருந்தார். நேற்று வெளியாகியுள்ள மானிய கோரிக்கையில் மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க கலை திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுவும் கடந்த ஆட்சி காலத்தில் வெளியான அறிவிப்பின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல்


அந்த 2019 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுள் 50 மாணவர்களை பின்லாந்து நாட்டிற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தனர். நேற்றைய தினம் வெளியான மானியக் கோரிக்கையில் இந்த திட்டமும் கடந்த ஆட்சியில் வெளியான அறிவிப்பின் தொடர்ச்சியாகவே உள்ளது.


கன்னிமரா நூலகத்தை புதுப்பித்தல்

கடந்த ஆட்சி காலத்தில் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது வெளியான முக்கியஅறிவிப்புகளில் ஒன்றுதான் கன்னிமரா நூலகத்தை புதுப்பித்தல். நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள மானிய கோரிக்கையில் இந்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது


ஆங்கில மொழி ஆய்வகங்கள்


கடந்த ஆட்சியில் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 9ம் வகுப்பு களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்குரிய கையேடுகளும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. தற்போது சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஆங்கில மொழிக்கான ஆய்வகங்கள் அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுவும் கடந்த ஆட்சியில் வெளியான ஆங்கில பயிற்சி என்கிற திட்டத்தின் ஒரு தொடர்ச்சியான திட்டமாகவே கருதப்படுகிறது.

நூலகங்களில் Wi-Fi வசதி


கடந்த 2018-2019ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் இடம்பெற்றுள்ள நூலகங்களில் வைஃபை வசதி என்கிற அதே அறிவிப்பு இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.


அதேபோன்று ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி , ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற கடந்த ஆட்சிகால மானிய கோரிக்கையில் வெளியான அறிவிப்புகள் இந்த ஆட்சியின் மானியக் கோரிக்கையிலும் தொடர்ச்சியான அறிவிப்புகளாக வெளியாகியுள்ளன.

Comments

Popular posts from this blog