ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்போகுது - பதிவு செய்வது எப்படி?



தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


இப்போட்டித் தேர்வில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 09.04.2022 அன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 08.04.2022 என்ற தேதிக்குள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் சென்று பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog