தொலைதூரக் கல்வி விவகாரம்.. அண்ணாமலை பல்கலை முக்கிய அறிவிப்பு..!



அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில், '2015-ம் ஆண்டுக்குப் பிறகு தொலைதூரக் கல்வி மூலம் இங்கு வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை.


அதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு பல்கலைக்கழகம் தான் பொறுப்பேற்க வேண்டும்' என, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்தது.


இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்போது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், 'அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.


இந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog