TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு... இன்னும் 4 நாட்கள் மட்டுமே..முக்கிய அறிவிப்பு..!!!!




தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தபட்டது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால், மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்ட நிலையில், கடந்த வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால், இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்துள்ளது.


மேலும் இதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் 7ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது .மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும் எனவும் ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து இத்தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.


இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை சமீபத்தில் தான் அதற்கான கடைசி நாள் என்ற நிலையில், அன்று விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கிய காரணத்தால், பல பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாமல் போனதை தொடர்ந்து, வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை ,இந்த தேர்வுக்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு வாரியத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog