TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு...வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!!!



தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் பதிவுசெய்வதில் இணையத்தில் சர்வர் வேகம் குறைவாக இருப்பதாக புகார்கள் பெறப்பட்டது. இதனால் தங்களுக்கு மேலும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் டி ஆர் பி யின் தலைவர் லதா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஈமெயில் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


அதற்குரிய பதில்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் நன்னடத்தை சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும் 1,398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது இதில் 1,085 மனுக்களுக்கு உரிய பதில்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அனைத்து தேவர்களும் இது தொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கேள்விகளுக்கு பதில் மனு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் இதனையடுத்து பதில் அளிக்கப்படாத தேர்வர்களின் கோரிக்கை மனு பரிசீலனை வைக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் மனுவை அனுப்ப வேண்டாம் என கூறப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog