TNPSC Group-4 இலவச பயிற்சி வகுப்புகள்; ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க.! முழு விபரம்




தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ TNPSC Group-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ TNPSC Group-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ தகுந்த பயிற்றுநர்களைக்‌ கொண்டு இன்று முதல்‌ வகுப்புகள்‌ நடைபெற உள்ளது.


மேலும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தில்‌ போட்டித்தேர்விற்கு தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம்‌ மற்றும்‌ புத்தகங்கள்‌ பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்பில்‌ இலவசமாக பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படும்‌ மற்றும்‌ மாதிரித்தேர்வுகள்‌ நடத்தப்படும்‌. இப்பயிற்சியில்‌ சேர விருப்பம்‌ உள்ளவர்கள்‌ https: / /bit.lv/ZO7Byt! என்ற Google படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌.04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌. தற்போது தமிழ்நாடு அரசுபணியாளர்‌ தேர்வாணையம்‌ 7,128 காலிப்பணியிடங்கள்‌ வெளியிட்டுள்ளதால்‌ போட்டித்‌ தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து பயன்‌ பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்‌

Comments

Popular posts from this blog