பொதுத்தேர்வில் பிட் பேப்பர்கள் : தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு!



11 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள், 472 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.


தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள அரசு பொது தேர்வு மையங்களில் மாணவ,மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விவகாரம் தேர்வுத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .


இந்நிலையில் 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog