ஜூலை 17ல் நீட் தேர்வு! நாடு முழுவதும் 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்! தமிழகத்தில் மட்டும் இத்தனை பேரா?




தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு

நடத்தப்படுகிறது.

தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

2013 மே மாதம் 5ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு மத்திய அரசின் இடைக்கல்வி வாரியம் நடத்திய நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு
 
இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும்.

2022- 2023 சேர்க்கை
 

இந்நிலையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த 20 ஆம் தேதி முடிவடைந்தது. நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் திருத்தம் செய்வதற்கான செயல்முறை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

1.82 லட்சம் பேர் விண்ணப்பம்
 

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு மூழுவதிலும் இருந்து நீட் தேர்வுக்கு 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2,57,562 பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழக மாணவர்கள்
 

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,42,286 பேர் விண்ணப்பத்துள்ளனர். மேலும், தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 91,415 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், 50,720 ஆயுஷ் இடங்கள் என்று 1,69,084 இடங்களுக்கு மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog