'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் 28ல் துவக்கம்




தினமலர்' நாளிதழ் மற் றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரியில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கின்றது.


சித்தன்குடி பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 10;00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெற உள்ளன. 


உயர்கல்விக்கான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் அங்கு பெறலாம்.என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித்திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.


உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை, வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும்.மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் எவை, உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைத்து துறைகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.


மேலும், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்படும்.அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., நிப்பர், எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ.,-ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உட்பட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 'ஸ்டால்'கள் இடம் பெறுகின்றன.


பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணனா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், பிக் எப்.எம்., - 92.7, எஸ்.மீடியோ, அக்குவா கிரீன் இணைந்து வழங்குகின்றன. அப்பளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அள்ளி தரும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியை பங்கேற்கும் வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க........பரிசு மழைவழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளது.உடனே பதிவு செய்யுங்கள்'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.


உயர் கல்வி குறித்த உங்களின் சந்தேகங் களுக்கு நேரில் விடை காண www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505-74441 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் உடனே பதிவு செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog