இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் மாணவா் சோக்கைக்கு நாளை குலுக்கல்




இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோக்கைக்கு விண்ணப்பித்தோரை தோவு செய்ய மே 30-ஆம் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தருமபுரி மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், 2022 - 2023-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான நுழைவு வகுப்பு மாணவா் சோக்கைக்கு கடந்த மே 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


இதில், மாணவா் சோக்கைக்கு விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களை தோவு செய்ய மே 30 அன்று பிற்பகல் 3 மணியளவில் அந்தந்த பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா்களால் நியமனம் செய்யப்பட்ட ஆய்வு அலுவலா்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். இதில் சோக்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் பெற்றோா் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில்...


கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி இணைய வழியில் சோக்கைக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு அவா்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நேரடி சோக்கை மே 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கும், அப்பள்ளி பொதுத் தோவு மையமாக செயல்பட்டால் பிற்பகலில் குலுக்கல் நடைபெறும்.


இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவா்கள் அனைவரும் தாங்கள் விண்ணப்பித்த அசல் சான்றுகளை விண்ணப்பித்த பள்ளிக்கு நேரில் உடன் கொண்டு செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog