அறிவியல் தேர்வு; அனைத்தும் எளிமை : பத்தாம் வகுப்பு மாணவர்கள் குஷி





கணிதத் தேர்வால் மனரீதியாக கலங்கியிருந்த மாணவர்களுக்கு 'டபுள்' உற்சாகம் தரும் வகையில் எளிய வினாக்கள் நிரம்பிய வினாத்தாளாக அறிவியல் தேர்வு அமைந்ததால் அதிக மதிப்பெண்களை அள்ளலாம் என பத்தாம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.மாணவர்கள் கூறியதாவது:


தேர்வு ரொம்ப எளிமை

கே.சிவானி, எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தது.


திருப்புதல் தேர்வில் வந்திருந்த சில வினாக்களும் இடம் பெற்றிருந்தன. நன்றாக படித்திருந்தால் 75 க்கு 75 மதிப்பெண் வாங்க முடியும். அனைத்து வினாக்களும் பாடப்புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து வந்திருந்தன. அனைத்து கேள்விகளும் தெரிந்தவையாக இருந்ததால் தேர்வு சுலபமாக இருந்தது.அனைவரும் பாஸ் தான்வி.செண்பகவள்ளி, அறிவியல் ஆசிரியர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்., பள்ளி, திண்டுக்கல்: வினாத்தாள் மிகவும் ஈசியாக இருந்தது.


திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த பெரும்பான்மையான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் வாங்கலாம். சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட எளிதில் பாஸ் ஆக முடியும். வினாத்தாள் அவ்வளவு எளிமையாக உருவாக்கியுள்ளனர்.





தேர்ச்சி பெறாமல் போவதற்கு வாய்ப்புகள் குறைவு.சென்டம் எடுக்கலாம்எஸ்.கார்த்திக் ராஜா,விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்: தேர்வு மிக எளிமையாக இருந்தது. அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் வினாக்கள் அமைந்திருந்தp. ஒரு மதிப்பெண் வினாக்களில் 10 வினாக்கள் ,2 மதிப்பெண் வினாக்களில் ஆறு வினாக்கள் , 4 , 7 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புக் பேக்கில் இருந்துதான் வந்திருந்தது. கட்டாய வினாவும் புக் பேக் தான்.


முதலாம் , இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன . அனைத்தும் எளிமையாக இருந்ததால் சராசரியாக படித்திருந்தாலே சென்டம் எடுக்க முடியும்.முழு மதிப்பெண் பெறலாம் வீ.வீரக்குமார். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பி.ஆர்.ஜி .வேலப்ப நாயுடு மெட்ரிக்., மேல்நிலை பள்ளி, நெய்க்காரப்பட்டி, பழநி: புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒருமதிப்பெண் கேள்விகளில் இரண்டு கேள்விகளும், 2, 3 மதிப்பெண் கேள்விகளில் தலா மூன்று கேள்விகளும் பாடத்திட்டத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.


கொரோனா நோய் தொற்றால் குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து கட்டாய பதிலளிக்கும் கேள்வியின் ஒரு பகுதி கேட்கப்பட்டிருந்தது. மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவது, எளிதில் வெற்றி பெறக்கூடிய தேர்வாக ஆக அமைந்திருந்தது.ஓரளவிற்கு எளிமை-ஏ.ஹரிகிருஷ்ணா, சக்திசாய் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாபட்டி, அய்யலுார்: கோதுமை தொடர்பான ஒரு மதிப்பெண் வினா ஒன்று மட்டும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்தின் பயிற்சி வினாக்கள் பகுதியிலிருந்தும், பாடத்தின் உட்பகுதியில் இருந்தும் கலவையாக கேள்விகள் இருந்தன. ஓரளவிற்கு எளிமையாக இருந்தது .


தேர்வுத்தாளுக்குரிய மதிப்பெண் 75ல் 20 பெற்றாலே தேர்ச்சி உறுதி என்பதால் அனைவரும் எளிதாக தேர்ச்சி பெறலாம். சுலபமாக 100 எடுக்கலாம் ஆர்.எஸ். குருவர்ஷினி, மாணவி, மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு: 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. பிற வினாக்கள் முழுவதும் சுலபமாக இருந்தது.


புத்தகத்திற்கு பின்னால் உள்ள வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேள்விகள் இல்லை. கேள்விகள் எதிர்பார்த்ததைவிட எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சரியாக எழுதி இருந்தால் சுலபமாக 100 மதிப்பெண் எடுக்கலாம்.

Comments

Popular posts from this blog