RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு... அறிவித்தது மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்!!




தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில் மே.25 வரை அவகாசத்தை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதிவரை பெறப்படவுள்ளது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 


மேலும் இதற்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும்.


நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23 ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயதிலான குழந்தைகளின் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் விதமாக 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தை இயற்றியது. 


இந்த சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் 25 சதவீத இடங்களை குழந்தைகளின் இலவச கல்விக்காக ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது. இச்சட்டத்தின்படி ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இலவசமாக சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.


அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் நாளையுடன் (மே 18 ஆம் தேதி) முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% சேர்க்கைக்கு மே 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் அவகாசத்தை மேலும் நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog