TNTET 2022 Exam: ஜுலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த முடிவு




ஆசிரியர் தகுதித் தேர்வை ஜுலை மாத இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்கு பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.


இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுநாள் வரையில் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஜுலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.





Comments

Popular posts from this blog