TRB: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு.! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.!




பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரிய அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டன. கணினி வழித்‌ தேர்வுகள்‌ 8.2.2021 முதல்‌ 1312.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வர்களின்‌ மதிப்பெண்கள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை 7 ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.


கூடுதல்‌ சான்றிதழ்களை / ஆவணங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்வது தொடர்பாக பல்வேறு பணிநாடுநர்களிடமிருந்து 1103.2022 முதல்‌ 01.04.2022 வரை 7,383 கோரிக்கை மனுக்கள்‌ வரப்பெற்றன. அவ்வாறு வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள்‌ கீழ்க்காணும்‌ 8 தலைப்புகளில்‌ வகைப்படுத்தப்பட்டன.


User ID மற்றும்‌ Login Password தொடர்பாக பெறப்பட்ட 2520 கோரிக்கைகளுக்கு தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு அவ்விவரம்‌ சார்ந்த பணிநாடுநர்களுக்கு மின்னஞ்சல்‌ வாயிலாகத்‌ தெரிவிக்கப்பட்டது. நன்னடத்தை சான்றிதழ்‌ தொடர்பாக 4,890 கோரிக்கை மனுக்கள்‌ வரப்பெற்றன. அவற்றில்‌ Conduct Certificate From the Head Of the Instution தொடர்பான கோரிக்கைகளுக்கு பணிநாடுநர்‌ இறுதியாகப்‌ பயின்ற கல்வி நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட மாற்றுச்‌ சான்றிதழ்‌ பிற சான்றிதழில்‌ நன்னடத்தை குறிப்பிடப்பட்டிருந்தால்‌ அச்சான்றிதழை பதிவேற்றம்‌ செய்யலாம்‌ எனவும்‌, மாற்றுச்‌ சான்றிதழ்‌ பிற சான்றிதழில்‌ நன்னடத்தை குறிப்பிடப்படாத நிலையில்‌ பணிநாடுநர்‌ இறுதியாகப்‌ பயின்ற கல்விநிறுவனத்திடமிருந்து நன்னடத்தை சான்றிதழைப்‌ பெற்று பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌ என சார்ந்த பணிநாடுநர்களுக்கு மின்னஞ்சல்‌ வாயிலாகத்‌ தெரிவிக்கப்பட்டது. நன்னடத்தை தொடர்பாக பெறப்பட்ட பிற கோரிக்கைகள்‌ நிராகரிக்கப்பட்டன.


பணி அனுபவச்‌ சான்றிதழ்‌ பெறுவது தொடர்பாக 3591 கோரிக்கை மனுக்கள்‌ வரப்பெற்றன. அவற்றில்‌ பணி அனுபவச்‌ சான்றிதழில்‌ மேலொப்பம்‌ பெறுவது பணி அனுபவம்‌ பகுதியொத்திருத்தல்‌, செயல்படாமல்‌ இருக்கும்‌ கல்லூரிகள்‌ / கல்வி நிறுவனங்களில்‌ பணி அனுபவச்‌ சான்று பெறுதல்‌ மற்றும்‌ அறிவிக்கை தேதிக்கு முன்னர்‌ பெறப்பட்ட பணி அனுபவச்‌ சான்றிதழ்‌ தொடர்பான கோரிக்கைகள்‌ சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஏதுமில்லை என்பதால்‌ அதுபோன்ற, கோரிக்கைகள்‌ நிராகரிக்கப்பட்டன.


விண்ணப்பத்தில்‌ பணி அனுபவத்தை தவறுதலாகப்‌ பதிவேற்றம்‌ செய்துவிட்டு திருத்தம்‌ கோரிய 1444 கோரிக்கைகள்‌, வெளி மாநிலங்களில்‌ பெற்றுள்ள பணி அனுபவம்‌ தொடர்பான 65 கோரிக்கைகள்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ பெற்றுள்ள பணி அனுபவம்‌ தொடர்பான 235 கோரிக்கைகள்‌ மற்றும்‌ பணி அனுபவம்‌ குறித்த தெளிவுரைகள்‌ தொடர்பான 816 கோரிக்கைகள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி 2560 பணிநாடுநர்களிடமிருந்து கோரிக்கைகள்‌ பெறப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரிக்கு விண்ணப்பதாரர்களால்‌ அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்த விவரங்கள்‌ ஒரு வார காலத்திற்குள்‌ தெரிவிக்கப்படும்‌.

Comments

Popular posts from this blog