ஆசிரியர்கள் பற்றாக்குறை; கல்வி அமைச்சர் விளக்கம்




10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மற்றும் தகரி சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விளையாட்டு துறையில் சிலம்பம் போட்டிக்கு 3% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.


பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்த அவர், சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனி குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார் என குறிப்பிட்டார். மேலும், 4 இடங்களில் ஒலிம்பிக் கமிட்டி, சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியாட் போட்டி என விளையாட்டை மேம்படுத்த பல திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளிகளில் 5 வயது கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது என தெரிவித்த அவர், மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் விரைவில் சுற்றறிக்கை வெளியாகும் என கூறினார். பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முக கவசம் அணிவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம் என தெரிவித்த அவர், 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து, மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரௌவதாக தெரிவித்தார். மேலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என கூறினார்.

Comments

Popular posts from this blog