சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது மற்றும் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதள முகவரி 





மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அதன்படி வாரியம் 10 ஆம் வகுப்பு முடிவுகளை ஜூலை 4 ஆம் தேதி அறிவிக்கும், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.


சிபிஎஸ்இ டெர்ம் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகியவற்றைப் சரிப்பார்க்கலாம்.


சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் தேர்வு முடிவுகள் 2022ஐ எவ்வாறு சரிபார்ப்பது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்


*முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும்- cbse.gov.in, cbresults.nic.in


* பிறகு 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைப்பை கிளிக் செய்யவும்


* பதிவு எண்/ ரோல் எண்ணை உள்ளிடவும்


* 10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2022 திரையில் தோன்றும்


* பின்னர் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கவும்.


இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை டிஜிலாக்கர் செயலி மற்றும் இணையதளத்தில் அதாவது digilocker.gov.in இலிருந்து பார்க்கலாம்.


முன்னதாக 2022 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பின் டெர்ம் 2 தேர்வை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர், அதில் 21 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ளனர், 14 லட்சம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ளனர். இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கியது. 10ஆம் வகுப்பு மே 24ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.


சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஃப்லைனில் நடத்தப்பட்டன. முன்னதாக, அதிகரித்து வந்த கோவிட்-19 பற்றவள் காரணமாக, 10 ஆம் வகுப்புக்கான ஃபிசிகல் எக்ஸாம் ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்தது.


10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் குறைந்தபட்சம் 30 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் மதிப்பெண் அட்டையைப் பெறலாம். CBSE டெர்ம் 2 முடிவு 2022, டெர்ம் 1 மற்றும் 2 தேர்வுகளில் ஒட்டுமொத்த செயல்திறனைக் கொண்டிருக்கும்.


Comments

Popular posts from this blog