அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்





அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஏற்கனவே 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 22ம் தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


முன்னதாக, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 12ம் வகுப்பில் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 7499 மேல்நிலைப் பள்ளிகளில், 2628 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 246 ஆகும்.



கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள்/ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.


மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற ஏதுவாக, மறுகூட்டல்/மறுமதிப்பீடு நடைமுறையை தேர்வுகள் இயக்கம் விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளும் என்று எதிபார்க்கப்படுகிறது.


இதற்கிடையே, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 (TNEA 2022) விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கியது. பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.

Comments

Popular posts from this blog