அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை.! வெளியான புதிய தகவல்..




மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்னும் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் இருக்கிறது. இதில் கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரி பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சோதனை முறையில் சென்னையில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் பள்ளிக்கல்வித்துறையால் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


10-ம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவருக்கும் 9-ம் வகுப்பில் தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகின்றது. 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும் TRUST தேர்வு மதிப்பெண்ணும், 9-ம் வகுப்பு சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு எனப்படும் NMMS தேர்வில் பெற்ற மதிப்பெண்ணும், 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ntse தேர்வு மதிப்பெண்ணும் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Comments

Popular posts from this blog